பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி செல்போன் பறித்த சம்பவம் : ஒருவன் கைது!!

Author: Udayachandran
12 October 2020, 2:42 pm
Accused Arrest - Updatenews360
Quick Share

சென்னை : செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த போலீசார் 6 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை எம்.கே.பி நகர் பெட்ரோல் பங்கில் கேசியராக பணிபுரிந்து வருபவர் சீனிவாசன். இவர் பங்கிலேயே தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சீனிவாசனிடம் பெட்ரோல் போட கேட்ட போது, நேரம் முடிந்து விட்டதால் பெட்ரோல் போட முடியாது என சீனிவாசன் கூறியுள்ளார்.

உடனே அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து பெட்ரோல் பங்க் மேனேஜர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

சம்பவ இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த நாகராஜின் மகன் கரண் என்கின்ற கரடி அருண் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 6 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கரண் எம் கே பி நகர், கொடுங்கையூர் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும், இவர் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Views: - 43

0

0