எப்படி இருந்த மனுஷன்… இப்போ இப்படியா! குடும்பத்தோடு விஜயகாந்த் வெளியிட்ட போட்டோ!!

16 November 2020, 7:12 pm
Vijayakanth - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். தனது புரட்சிகரமான நடிப்பில் மக்கள் மனதை கட்டிப்போட்டவர். அரசியலில் நுழைந்த இவர், அரசியலிலும் ஹீரோவாக வலம் வந்தார்.

எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட விஜயகாந்த் தனது அரசியல் கட்சி மூலம் பல்வேறு உதவிகளை செய்தார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த், வெளிநடுகளில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

பெரும்பாலும் எந்த மேடையில் தோன்றாமல் இருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முறுக்கேற்றும் தோற்றத்தில் இல்லாமல் சற்று மெலிந்து காணப்படுகிறார். எப்படி இருந்த மனஷன் இப்படி ஆயிட்டார் என்று புலம்பாதவர்களே இல்லை. மீண்டும் பழைய நிலையில் அவரை பார்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கடவுளை வேண்டிக்கொண்டுள்ளனர்.

Views: - 8

0

0