எந்த தடை வந்தாலும் நிச்சயம் யாத்திரை : பாஜக தலைவர் முருகன் சூளுரை!!

31 October 2020, 7:21 pm
Murugan - Updatenews360
Quick Share

மதுரை : எந்த தடை வந்தாலும் வேல் யாத்திரை நிச்சயமாக நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரை உத்தங்குடி சாலையில் உள்ள தாமரை திடலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பாஜக சார்பில் ஆளுநருக்கு எங்கள் நன்றி. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பலன் தரும் வகையில் 7.5 சதவீத இடஓதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி என தெரிவித்தார்.

தேவர் நினைவிடம் என்பது கோவில் சித்தர் பீடம் போன்றது. கோவிலில் என்ன நெறிமுறை வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமோ அதை பின்பற்ற வேண்டும். ஆனால் ஸ்டாலின் தனக்கு கொடுக்கப்பட்ட திருநீறை கீழே ஏறிந்துள்ளார்.ஒவ்வொரு முறையும் இந்துக்களையும், இந்து தெய்வங்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் என கூறினார்.

எதற்காக ஸ்டாலின் ஒரு போலி வேஷம் போட வேண்டும். ஓட்டுக்காக எதற்காக பொய் நாடகம் நடத்த வேண்டும்.ஆனால் மக்கள் தெளிவாக உள்ளார்கள். ஓட்டுக்காக ஏமாற்றும் வேலையை செய்யக்கூடாது என தெரிவித்தார்.

தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் செய்த செயல் மக்கள் மனதை புண்படுத்தி உள்ளது. தமிழக மக்களிடம் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது வழக்கமாக போய்விட்டது என கூறினார்.

இந்திய தாய்மார்களை பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். என்ன சமூக நீதி? பெண்கள், தலித் மக்களை அவதூறாக பேசுபவர்களுக்கு ஸ்டாலின் கேடயமாக உள்ளார். அவர் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் தலித் மற்றும் பெண்களுக்கு எதிராக பேசினால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றுகிறார்.

எதற்காக வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும். மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தமிழ்க்கடவுள் முருகனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்க்கடவுள் முருகனை இழிவு படுத்திய கருப்பர் கூட்டம் பின்னால் திமுக இருந்தது என எல்லோரும் சொல்கிறார்கள்.

அவர்களுக்கு சட்ட உதவி செய்தது திமுக. வரலட்சுமி விரதம் பெண்கள் நோன்பிருக்கும் நேரத்தில் இந்த சர்க்கையை பேசுகின்றனர். அவர்களின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை. இந்தியாவில் மத்திய அரசின் அதிக திட்டங்கள் தமிழகத்தில் தான் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

மனுஸ்ருமி என்ற ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு கற்பனை.அம்பேத்கார் இயற்றிய சட்டத்தால் மட்டுமே நாடு இயங்கி கொண்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றது.
நடைமுறையில் இல்லாத மனுஸ்ருமியை எப்படி தடை செய்ய முடியும்.

எதிக்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பயம் உள்ளது. இளைஞர்கள், தாய்மார்கள் பெண்கள் மத்தியில் பாஜக வளர்ந்துள்ளது. ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்ந்து விடும் என்பதால் அச்சப்படுகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்துள்ளது. பாஜக மூளை மூடுக்கெல்லாம் வளர்ந்து கொண்டுள்ளது. யாத்திரை நடந்தால் பாஜக பக்கம் மக்கள் வந்துவிடுவார்கள் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளனர். எந்த தடை வந்தாலும் வேல் யாத்திரை நிச்சயமாக நடைபெறும்.

Views: - 17

0

0