பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட திட்டம் : சமூக செயற்பாட்டாளர் முகிலன் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2021, 9:55 am
Mukilan Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு பிரதமர் மோடி இன்று வருகை தரும் நிலையில் சமூக செயற்பாட்டாளர் முகிலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் முருகன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இன்று முருகனை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் முகிலன் கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின

இதையடுத்து சமூக செயற்பாட்டாளர் முகிலனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வைத்து முகிலனை போலீசார் கைது செய்தனர்.

Views: - 88

1

0