காட்டு யானை தாக்கி தோட்ட காவலாளி பலி : மேலும் ஒருவர் படுகாயம்!!

16 January 2021, 2:36 pm
Elephant Attack- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகம் கெம்பநாயக்கன்பாளையம் சுற்றுக்கு உட்பட்ட அட்டணை கிராமத்திலுள்ள சடையப்பன் என்பவரின் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டிருந்த தோட்டத்தில் நேற்றிரவு யானை ஒன்று புகுந்தது.

இந்த நிலையில் இரவு காவலுக்கு இருந்த கூலி தொழிலாளி பெரியசாமி (வயது 45) என்பவர் காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த விவசாயி சடையப்பன் (வயது 50) காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.

யானையிடமிருந்து தப்பித்த சடையப்பன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 7

0

0