தயவு செய்து வெளியே வராதீர்கள் : கைக்கூப்பி கெஞ்சி கேட்கும் போக்குவரத்து காவலர்!!

12 May 2021, 6:12 pm
Police Request - Updatenews360
Quick Share

விழுப்புரம் : தயவுசெய்து வெளியில் வர வேண்டாம் என கொரானா பரவல் தடுப்பில் உணர்வுபூர்வமான காவல் உதவி ஆய்வாளர் பணி செய்த காட்சிகள் பாராட்டுகளை பெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 422 பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தத்தில் 146 உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2517 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு போடப்பட்ட பின்னரும் தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் விழுப்புரம் மாவட்ட தலை நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தொற்று அதிகம் பரவும் அபாய நிலையில் உள்ளது.

மேலும் காவல்துறை பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்த பாடு இல்லை. இந்நிலையில் விழுப்புரத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தில் நாள் தோறும் அதிகமானோர் வருகை புரிவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

கடந்த 2 நாட்களாக பல முறை எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லாத நிலையில்..
இன்று விழுப்புரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குமார ராஜா விழுப்புரம் மாவட்ட தலைநகருக்கு வாகனத்தில் வருபவர்களை நிறுத்தி கைகுப்பி வெளியில் வரவேண்டாம் என கோரிக்கை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து நிற்கவைத்து எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கோரிக்கை விடுத்து கை எடுத்து பொது மக்களை நோக்கி கும்பிட்டு கோரிக்கை விடுத்து வரும் சம்பவம் உணர்வு பூர்வமான பணியை பலரும் பாராட்டி வருகின்றனர்..

Views: - 128

0

0