பைக் சாவிகளை பெற்றோரிடம் கொடுத்து மறைத்து வைக்கச் சொல்லுங்கள் : ராமதாஸ் அறிவுரை..!!

15 May 2021, 11:25 am
ramadoss updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த தளர்வுகளை பொதுமக்கள் தவறுதலாக பயன்படுத்தி, பொது வெளியில் தொடர்ந்து நடமாடி வருகின்றனர். எனவே, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இன்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்த முழு ஊரடங்கிற்கு ஒப்புதல் அளித்து, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “முழு ஊரடங்கு என்றால் வீட்டை விட்டு வெளியில் வராதே என்பது தான் அர்த்தம். மகிழுந்து, இரு சக்கர ஊர்திகளின் சாவிகளை பெற்றோரிடம் கொடுத்து மறைத்து வைக்கச் சொல்லுங்கள். ஊரடங்கின் பொருளை இன்னும் புரிந்து கொள்ளாமல் ஊர் சுற்றி வருவோருக்கான அறிவுரை இது.

வெளியே சுற்றாமல் வீட்டில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் உங்களையும், குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தொற்று இருந்தால் வெளியில் சுற்றி அதை பரப்பாததன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள்,” என தெரிவித்துள்ளார்.

Views: - 123

0

0