தனது மனைவியுடன் வாக்களித்த பாமக நிறுவனர் ராமதாஸ் : திருக்குறளை கூறி திமுக மீது விமர்சனம்!!

6 April 2021, 9:06 am
Ramadass Vote -Updatenews360
Quick Share

விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் ஜனநாயக கடமையை ஆற்றினார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன் மனைவி சரஸ்வதி அம்மாள் மற்றும் குடும்பத்தினருடனும் மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் அமைத்துள்ள 104 வது வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, நான் ஏழாவது முறையாக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து உள்ளேன். இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக நிம்மதியான ஆட்சி மக்கள் நிம்மதியாகவும் பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாட கூடிய நல்ல ஆட்சி நடைபெற்றது.

உழவர்கள் பிரச்சினை முழுமையாகவும் அல்லது படிப்படியாகவும் தீர்க்கப்படவேண்டும் தமிழகத்தில் கல்விக்கும் உயர் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்தும் கொடுத்து மக்கள் அதற்காக செலவு செய்யாமல் செலவு முழுவதும் அரசு ஏற்கும் நிலை உருவாக வேண்டும் என்றார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. கருத்துக் கணிப்புக்கு மக்கள் முக்கியத்துவம் தருவதில்லை. ஏனென்றால் கருத்து திணிப்பாக இருப்பதால் மக்கள் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை வன்னியருக்கு பத்தரை சதவீதம் வழங்கியது தற்காலிகமானது என்பது உண்மையா எனக் கேட்டதற்கு டாக்டர் ராமதாஸ் இதற்கு ஏற்கனவே முதலமைச்சர் சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் பதில் அளித்து உள்ளனர், தற்போதைக்கு அது தேவையில்லை என்றார்.

ஸ்டாலின் பிரச்சாரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, பிரச்சாரம் பிரச்சாரம் பிரச்சாரம் என கேலி செய்து வேறு ஒன்றும் இல்லை எனக்கூறினார். தேர்தல் பிரச்சாரத்தில் தரம் தாழ்ந்து பேசுவதை குறித்து கேட்டதற்கு, விமர்சனம் கொள்கை அடிப்படையில் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விமர்சனம் செய்யலாம் அது கூட நயமாகவும் நளினமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும்.

யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது ஓ.பி. ராமசாமி ரெட்டியார், காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை வரையில் விமர்சனங்களை நாகரீகமாக பேசினார்கள். இப்போது அந்த நிலை மாறியுள்ளது. அரசியல் கட்சிகள் விமர்சனங்களை தரமாக செய்யும்படி வகுத்துக்கொள்ள வேண்டும். தனிநபர் மற்றும் குடும்பத்தினர்கள்,பெண்கள் ,தாய்மார்கள், தாயை இழிவு படுத்தி பேசுவது இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று திருவள்ளுவர் வார்த்தைக்கு ஒப்பாகும் என தெரிவித்தார்..

Views: - 74

0

0