கூட்டமும் கொண்டாட்டமும் எனக்கு மிகவும் பிடிக்கும் : கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ராமதாஸ்!!

Author: Babu Lakshmanan
9 September 2021, 6:22 pm
ramadoss - corona - updatenews360
Quick Share

நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, நீர்நிலைகளில் கரைக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆளும் திமுக அரசு வேண்டுமென்ற தங்களின் மத விழாவுக்கு தடை விதிப்பதாகவும், ஆனால் திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படும் என்று இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பு மற்றும் கட்சிகள் கூறி வருகின்றன.

இதனிடையே, கொரோனா தமிழகத்தில் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், 3வது அலைக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு அளிக்கும் விதமாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதாவது, கூட்டமும் கொண்டாட்டமும் எனக்கு மிகவும் பிடிக்கும் – கொரோனா. கொரோனா சொல்வதைப் பார்த்தீர்களா? இப்போதாவது உண்மையை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட்டு, கொரோனாவை தவிருங்கள். நோயிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் – மருத்துவர் இராமதாசு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 323

0

0