பாஜக கூட்டணியில் பாமக, தவெக? நிச்சயம் வெற்றி : அடித்து சொல்லும் அரசியல் கட்சி தலைவர்!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2025, 6:57 pm

நாகர்கோவிலில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பேட்டியளித்தார்: அப்போது கூறிய அவர், அதிமுக, பாஜ, தமாகா கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளும், புதியதாக உருவான கட்சிகளும் இணையும் என நம்புகிறேன்.

இதையும் படியுங்க: ஆர்கே நகர் தேர்தலின் போது திமுகவில் இதே கூட்டணிதான்… 2026ல் வெற்றி வாய்ப்பே இல்லை : டிடிவி நம்பிக்கை!

செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இது மேலும் தீவிரமாகும். பாமக பிரச்னைக்கு பாரதிய ஜனதா காரணமல்ல. இந்தியாவில் தேசிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளிலும் உள்கட்சி மோதல்கள் ஏற்படுவது இயல்பு. பின்னர் அவை சரியாகிவிடும்.

GK Vasan

பாமக, தவெக ஆகியவை பாஜ கூட்டணியில் இணையும். தேமுதிகவிற்கு எம்பி சீட் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

PMK, TVK in BJP alliance.. Says Political party leader

தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

  • bayilvan ranganathan talks about srikanth case நடிகர்களின் போதை பழக்கம்? தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!