சென்னையில் அம்மோனியம் நைட்ரேட்டா…! உடனே காலி செய்க : அரசுக்கு ராம்தாஸ் கோரிக்கை!!

6 August 2020, 1:58 pm
ramadoss updatenews360
Quick Share

சென்னை கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆக.,4ம் தேதி லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள கிடங்கு ஒன்றில் குவித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்ததுடன், 3 லட்சம் பேர் வீடுகளை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, பெய்ரூட் நகரம் 400 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற விட்டாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், லெபனானின் லெபனானின் வெடி விபத்திற்கு காரணமாக இருந்த அம்மோனியம் நைட்ரேட் சென்னையில் இருப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியது. கடந்த 2015ம் ஆண்டு உரிய அனுமதி பெறாமல், இறக்குமதி செய்யப்பட்டதாக கரூர் அம்மன் கெமிக்கல் நிறுவனத்திடம் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது, லெபனானில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுங்கத்துறையினரும் அது பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “
சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!,” எனத் தெரிவித்துள்ளார்.