சிறுமியை கர்நாடகாவுக்கு கடத்தி சென்று ‘பாலியல் பலாத்காரம்‘:இளைஞர் கைது!!

Author: Udayachandran
3 October 2020, 3:56 pm
Krishnagiri Pocso- updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : வடமாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்நாடகாவுக்கு கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உளிவீரணப்பள்ளி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கி அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேவான் மகன் மலிங்கா (வயது 23) என்பவர் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அப்பெண்ணை கடத்திச் சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோர்கள் ஓசூர் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமியை கடத்திச் சென்ற மாலிங்கன், கர்நாடக மாநிலம் மாஸ்தி பகுதியில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று 15 வயது சிறுமியை மீட்டனர்.

பின்னர் ஓசூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. வந்தது, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக மலிங்காவை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்

Views: - 43

0

0