கொம்புகள் உடைந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் சுற்றிய புள்ளிமான் : வனத்துறை விசாரணை!!

13 November 2020, 5:11 pm
Deer Rescue - Updatenews360
Quick Share

கோவை : கொம்புகள் உடைந்த நிலையில் வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த ஆண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, மருதமலை வனபகுதியை ஒட்டியுள்ள கல்வீராம்பாளையம், முருகன் நகர் பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. கொம்பு உடைந்து தலையில் காயத்துடன் வந்த புள்ளிமானை கண்ட நாய்கள் துரத்த தொடங்கியதால் அச்சமடைந்த புள்ளிமான் வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து ஒன்றில் பதுங்கியது.

புள்ளிமானை ஆச்சரியத்துடன் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் அங்கு வந்த வனதுறையினர் மானைமீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் அடர் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், மான் வகைகள் இயல்பாகவே இரண்டாம் முறை கொம்பு வளர்ச்சிக்கு தானாகே கொம்புகளை உடைத்து கொள்ளும் தன்மை கொண்டது எனவும் இதன் காரணமாகவே கொம்புகள் உடைந்து இருக்கலாம் எனவும் தானாவே இது குணமடைந்து கொம்புகள் வளரும் எனவும் மான் தற்போது ஆரோக்கியமாக உள்ளது எனவும் தெரிவித்தனர்.

Views: - 23

0

0