13 வயது சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது…

Author: Udhayakumar Raman
25 September 2021, 10:29 pm
Quick Share

அரியலூர்: நாகமங்கலம் கிராமத்தில் 13 வயது சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நகாமங்கலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ரஞ்சித், விஜய், ரமேஷ், சத்யராஜ் உள்ளிட்ட 4 பேர் ஒருவர் பின் ஒருவராக கடந்த சில நாட்களில் தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்த நிலையில் இவர்கள் 4 பேரையும் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி இன்று உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இதற்கான கோப்புகளை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அளித்தனர்.

Views: - 233

0

0