முயலுக்கு பதில் முருகேசனை சுட்ட நண்பன் : நாட்டுத் துப்பாக்கியுடன் 4 பேர் கைது!!!
2 March 2021, 6:55 pmதிருப்பூர் : அவிநாசி அருகே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்து முயல் வேட்டைக்கு சென்ற 4 பேரை கைது செய்து மூன்று துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ஈட்டிவீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர், நியூ திருப்பூர் அருகிலுள்ள வேலூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் தனது நண்பர்களோடு சேர்ந்து நியூ திருப்பூருக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 28 ஆம் தேதி முயல்வேட்டைக்கு சென்றுள்ளனர்.
இதில் முருகேசன், மகேந்திரனின் நண்பர்கள் வேட்டைக்கு பயன்படுத்தும் ஏர் கன் எனப்படும் நாட்டு துப்பாக்கியை கொண்டுவந்துள்ளனர். சம்பவத்தன்று அதிகாலை முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு முருகேசனின் தோல் மீது பாய்ந்தது.
முருகேசன் மீது குண்டு பாய்ந்ததில் பயந்துபோன மகேந்திரன் மற்றும் நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்த முருகேசனின் உறவினர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மகேந்திரன் , மனோகரன் , சந்துரு , ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் , வெடிமருந்து மற்றும் ஈயத் குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
0
0