வாலிபரை கொலை செய்தவர்களை 10 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

By: Udayaraman
31 July 2021, 8:48 pm
Quick Share

கோவை: கோவையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் 10 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணி (30). தொழிலாளி. இவருடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விஜயநாராயணம். ஒண்டிப்புதூரில் தோட்டம் வைத்திருப்பவர் செந்தில் 30. இவர்கள் இருவரும் அடிக்கடி தோட்டத்திற்கு சென்று மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் செந்திலின் தம்பி ரகுராமன் மற்றும் அவரின் நண்பர்கள் அனிஷ் குமார், அஜித்குமார் சத்தியநாராயணா, ஆண்டனி ஆகியோர் அந்த தோட்டத்திற்குச் சென்று மது அருந்தி, கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது அங்கு சென்ற மணி இங்கு எவ்வாறு மது அருந்த வரலாம் என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார் .இதனால் ஆத்திரம் அடைந்த அனிஷ்குமார் உள்ளிட்ட நண்பர்கள் மணியை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 10 மணி நேரத்தில் 5 கொலையாளிகளையும் கைது செய்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட சிங்காநல்லூர் போலீஸ்சாரை அதிகாரிகள் பாரட்டியுள்ளனர்.

Views: - 111

1

0