“எங்க புகார காது கொடுத்து கூட கேக்கல“ : புகாரளிக்க வந்த விவசாயி குடும்பத்தினர் மீது போலீசார் தாக்குதல்!!

30 November 2020, 12:26 pm
Police Attack - Updatenews360
Quick Share

விழுப்புரம் : புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயி குடும்பத்தினர் மீது போலீசார் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சார்ந்த சகோதரர்கள் கணேசன் பாரிவள்ளல் என்பவருக்கும் ராஜசேகர் என்பருக்கும் 7.5 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து உள்ளது.

இது தொடர்பாக சகோதரர்கள் கணேசன், ராஜசேகர் பதினோரு முறைக்கு மேலாக விக்கிரவாண்டி காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

வாராந்திர குறைகேட்பு தினமான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டைகளை தரையில் போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கடுமையாக தாக்கி வாகனத்தில் பலவந்தமாக ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 2

0

0