காவலரின் பொறுமையை சோதித்த போதை ஆசாமி… சாக்கடையை வாரி இறைத்து சண்டைக்கு இழுத்து அலப்பறை!!

24 June 2021, 7:17 pm
Police Attacked By Durunken Man - Updatenews360
Quick Share

நெல்லை : சங்கரன்கோவில் அருகே விசாரணைக்கு சென்ற காவலர் மீது போதை ஆசாமி சாக்கடையை விசி ஆபாச வார்த்தையால் திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம் கல்லத்திக்குளம் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவன் குடித்து விட்டு குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்வதாக சின்ன கோவிலாங்குளம் காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதையடுத்து காவலர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது மதுபோதையில் இருந்த காவலரை அசோகன் ஆபாசமாக திட்டி வசைபாடினான்.

இதையடுத்து அவன் போதையை தெளிய வைக்க காவலர் கை ஓங்கிய போது, அவன் பதிலுக்கு சாக்கடையை அள்ளி காவலர் மீது வீசினான். இந்த சம்பவத்தின் போது அங்கிருந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்.

போதை தலைக்கேறிய ஆசாமி காவலரை அடிக்க பாய்ந்ததோடு அவரது தலைக்கவசத்தை தூக்கி வீசி அட்டகாசம் செய்தான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அசோகனே போலீசுக்கு டாட்டா காட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளான்.

Views: - 233

0

1