விசாரணை என்ற பெயரில் வீட்டுற்குள் புகுந்து பணம், நகையை எடுத்து சென்ற போலீஸ்.. இளம்பெண் பகீர் புகார்.. வைரலாகும் வீடியோ!
கோவை, கவுண்டம்பாளையம் பாலம் நகர் பகுதியில் சேர்ந்தவர் வினோத் என்பவரின் மகள் சிந்து ( 23). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு வந்த இருவர் ஜாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டியதாக கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சிந்து புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் உமா, ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் ஜாதி பெயரை சொல்லி திட்டியது உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் சிந்து தனது வழக்கறிஞரை சந்திப்பதற்காக கோவை நீதிமன்ற வளாகம் பின்புறம் உள்ள கோபாலபுரம் பகுதிக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த உமா திடீரென சிந்துவிடம் தகராறில் ஈடுபட்டார்.
உமாவும் சிந்துவும் அங்கு ஒருவரை ஒருவரை தாக்கி கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த சம்பவம் தொடர்பாக உமா அளித்த புகாரின் பேரில் சிந்து மற்றும் பார்த்திபன் மீதும் சிந்து அளித்த புகாரின் பேரில் உமா மீதும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கவுண்டம்பாளையம் பாலன் நகரில் உள்ள சிந்துவின் வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீசார் தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் திடீரென வந்ததாக கூறப்படுகின்றது.
அப்போது சிந்து மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.வந்திருந்த போலீஸ்காரர்களுடன் ஒரே ஒரு பெண் போலீஸ் மட்டும் சீருடையில் வந்திருந்தார். தொடர்ந்து அவர்கள் வீட்டில் புகுந்து ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.இது குறித்து சிந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, ஏற்கனவே நான் அளித்துள்ள இரண்டு புகார்களை வாபஸ் பெற வேண்டும் என்று போலீசார் வீட்டிற்கு வந்து மிரட்டி சென்றுள்ளனர்.
கடந்த வாரமும் இதேபோல போலீசார் வீட்டுக்கு வந்து மிரட்டி சென்றனர்.மேலும் இன்று வந்த போலீசார் வீட்டில் வைத்திருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ஐந்தரை பவுன் தங்க நகை மற்றும் அதற்குண்டான ரசீதுகள் அனைத்தையும் எடுத்து சென்று விட்டனர் என்று பேசியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.