காஞ்சி அருகே வாலிபரை துரத்தி தாக்கி வழிப்பறி : மர்மகும்பலுக்கு போலீசார் வலை!!

31 January 2021, 7:48 pm
Robbery- Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : வாலிபரை துரத்தி வழிமறித்து தாக்கி, செல்போன் பணத்தை அபகரித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஓரிக்கை காந்தி நகரை சேர்ந்த பாபு. சென்னையில் கணினி மையத்தில் பணிபுரியும் இவர் நேற்று இரவு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஏனாத்தூர்
ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இவரது மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி விழுந்த பாபுவை பைக்கில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

மேலும், பாபுவின் மோட்டார் சைக்கிள் டயர்களை கத்தியால் கிழித்து, அவரிடமிருந்த பணம், மொபைல் போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Views: - 35

0

0