தொடர்ந்து பெண்களுக்கு வலை விரித்த காவலர்.. மனைவியும் புகார்.. சென்னையில் நடந்தது என்ன?

Author: Hariharasudhan
28 November 2024, 6:09 pm

சென்னையில் காவலர் ஒருவர் ஒரு பெண்ணை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வருபவர் செல்லதுரை. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் உடன் வடபழனியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். மேலும், இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தனிமையிலும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.அதேநேரம், அந்தப் பெண்ணிடம் காதலிப்பதாக கூறிய செல்லதுரை, 3 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றை வாங்கியதாகத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்தும், செல்லதுரை மீண்டும் அந்த இளம்பெண்ணிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண், செல்லதுரையிடம் தான் கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பிக் கேட்ட போது, அதனைத் தர முடியாது எனக் கூறியுள்ளார். அது மட்டுமின்றி, செல்லதுரை அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.‌ இந்த நிலையில், அப்பெண் செல்லதுரை வசிக்கும் வடபழனி காவலர் குடியிருப்புக்குச் சென்று பணத்தை கேட்டுள்ளார்.

Police cheating many women in chennai

அப்போது செல்லதுரையின் மனைவி செல்விக்கும், அப்பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து, காவலரின் மனைவி செல்வி தன்னையும், தன் மகளையும் தாக்கியதாக இளம்பெண் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல், தன்னிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக செல்லதுரை மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வடபழனி காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இவ்வாறு இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌

இதனிடையே, இளம்பெண்ணிடம் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததுடன் அவரிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக காவலர் செல்லதுரையை ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றி, மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பணிக்காக மதமாற்றம்.. தமிழக பாஜக ஸ்டாலினுக்கு முக்கிய வலியுறுத்தல்!

முன்னதாக, செல்லதுரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, சக பெண் காவலர் ஒருவரை காதலிப்பதாக கூறி பணம், நகை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக அப்பெண் அளித்த புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டு, அதன் பிறகே கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், செல்லதுரை, மணலி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, சக பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நிலையில், அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 96

    0

    0

    Leave a Reply