அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு : 294 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2021, 5:41 pm
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி தினமான இன்று பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடுக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 294 பேர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
0