திருமண ஏக்கத்தில் இருந்த இளைஞர்….கழுத்தறுத்து கொன்ற கும்பல்…!!!

Author: Aarthi
16 October 2020, 3:29 pm
crime - updatenews360
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருமண ஏக்கத்தில் இருந்த இளைஞரை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சந்தோஷ். கடந்த 10ம் தேதி சென்னை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வடக்கு தில்லைநாயகபுரம் தனியார் கல்லூரி அருகே உள்ள சடுகாட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தோஷ் சடலமாக கிடந்துள்ளார்.

தகவலறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சில சிசிடிவி காட்சிகளையும், காணாமல் போன சந்தோஷின் செல்போனை குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிசிடிவி காட்சியில் சந்தோஷுடன் மேலும் 3 பேர் சென்று வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

மேலும், சந்தோஷின் செல்போன் தமிழ்செல்வி என்ற பெண்ணிடம் இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ராஜேஷ் என்பவரை பற்றிய தகவல் கிடைத்தது. ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்டபோது பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தன.

கொலை நடந்த அன்று சந்தோஷ் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக்கில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கிருந்த ராஜேந்திரன், ராஜேஷ், சுப்ரமணியம் ஆகிய 3 பேர், சந்தோஷிடம் செல்போன், லேப்டாப், நிறைய பணம் வைத்திருப்பதை அறிந்துகொண்டு, பேச்சுக்கொடுத்துள்ளனர்.

சந்தோஷ் ‘தான் அழகாக இல்லை, தனக்கு திருமணம்’ ஆவது தள்ளிபோவதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை சாதமாக்கி கொண்ட 3 பேர் சந்தோஷிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர், சந்தோஷை சிதம்பரம் வண்டிகேட் பகுதிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற 3 பேரும் சந்தோஷிடம் இருந்து செல்போன், லேப்டாப், பணத்தை கொள்ளையடித்துவிட்டு, சந்தோஷை கொலைசெய்து தப்பியுள்ளனர்.

செல்போனை ராஜேஷ் தனக்கு பழக்கமான தமிழ்செல்வியிடம் கொடுத்துள்ளான். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலையாளிகள் 3 பேர் பிடிபட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 47

0

0