கிருஷ்ணகிரியில் கஞ்சா வைத்திருந்த 9 பேர் கைது…!!

10 November 2020, 11:13 am
crime-arrest-updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது ஓசூர் ராம்நகர் பகுதியை சேர்ந்த நூர் அகமது, சிப்காட் பேடரப்பள்ளியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிக்ராம், பாகலூர் பெளத்தூர் பகுதியை சேர்ந்த பாபு, சூளகிரி ஒட்டையனூரில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நெமிசன்சர்மா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும், தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பாரூர் தேவீரஅள்ளி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ், நாகரசம்பட்டி தாதன்கொட்டாய் நாராயணன், தேன்கனிக்கோட்டை சிசான் தெரு மஞ்சு என்கிற மஞ்சுநாத், கெலமங்கலம் பென்னிக்கல் திலீப்குமார், ஊத்தங்கரை ஊமையன்கொட்டாய் வேடியப்பன் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தலா 500 கிராம் கஞ்சா என 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 22

0

0