துவரை சாகுபடியில் ஊடுபயிராக கஞ்சா: தள்ளாடும் வயதில் தறிகெட்ட முதியவர் …..!!

By: Aarthi
6 October 2020, 12:37 pm
thiurpathur kanja case - updatenews360
Quick Share

திருப்பத்தூர்: சந்திரபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்த்து வந்த முதியவரை கைது செய்த போலீசார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட சந்திரபுரம் ஊராட்சி ‌ கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தர்மன். 75 வயதான இவரும் அவரது மனைவியும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது விவசாய நிலத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்துள்ள தர்மன், துவரை செடிகளுக்கு இடையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாகுபடியும் செய்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.

தகவலின்பேரில் மாவட்ட போதை தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் துவரைக்கு செடிகளுக்கு இடையில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் முதியவரை கைது செய்து தோட்டத்தில் வளர்த்து வந்த 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் முதியவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாய நிலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 50

0

0