முழு ஊரடங்கு: தமிழக புதுச்சேரி எல்லையில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

Author: kavin kumar
16 January 2022, 2:11 pm
Quick Share

புதுச்சேரி: தமிழ்நாட்டில் முழு பொதுமுடக்கம் இன்று அமலில் உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் தமிழக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று இரண்டாவது வாரமாக முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், புதுச்சேரியில் பொதுமுடக்கம் இல்லாததாதல் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை அனுமதிக்காமல் தமிழக போலீசார் இருமாநில எல்லையில் சீல் வைத்து 5 மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் புதுச்சேரிக்குள் வருவபர்களை பரிசோதனை செய்யாமல் அப்படியே அனுமதிப்பதால் புதுச்சேரியில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தமிழகத்தில் இன்று இரண்டாவது வாரமாக தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கின்றது.

அதே நேரம் புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் அனைத்தும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று காலை முதல் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பைபாஸ் சாலையில் தமிழக புதுச்சேரி எல்லையில் விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தலைமையிலான காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மருத்துவ சிகிச்சை, துக்க நிகழ்வு ஆகியவை தவிர வேறு எதற்காகவும் புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனத்தையும் தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் அதிரடியாக திருப்பி அனுப்பினர். அதே போல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்குள் வருபவர்களை மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் புதுச்சேரிக்குள் இருக்கும் தமிழக பகுதிகளான கோட்டக்குப்பம் போன்ற பகுதிகளில் முழு அடைப்பு அமலில் இருப்பதால் அதன் எல்லைகளிலும் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதனிடையே புதுச்சேரியில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டாலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை ஆனால் புதுச்சேரிக்குள் மட்டுமே பேருந்து சேவை இயக்கப்பட்டது.

Views: - 368

0

0