கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் கிராமத்தில் உள்ள ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் அஸ்கர் அலிகான்(53). இவர் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவில் மாவட்ட தலைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் இன்று இரவு தனது வீட்டில் இருந்து இ.சேவை மையத்திற்கு செல்வதற்காக வெளியே பைக்கை எடுக்க வந்துள்ளார். அப்போது இவர் மீது ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஏர்கன்னில் இருந்த ரவை செல்போனில் பட்டதாகவும், அதனால் செல்போன் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: அதிகாலையிலேயே புகுந்த அமலாக்கத்துறை… டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சிக்கும் உயரதிகாரிகள்?
இந்த சம்பவம் குறித்து அஸ்கர் அலிகான் உடனடியாக பரங்கிப்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி விஜிகுமார் (பொ) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
முதலில் அஸ்கர் அலிகானின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும், அதை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்கையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்
இந்த சம்பவத்தில் அஸ்கர் அலிகானுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவரது செல்போன் மட்டுமே லேசான சேதமடைந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பாஜக முக்கிய நிர்வாகிகள் அவரது வீட்டின் முன்பு கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து செய்தியாளரிடம் கூறிய அஸ்கர் அலிகான், இ.சேவை மையத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டிக்கொண்டு பைக்கை எடுக்க வந்தபோது சிறுவர்கள் விளையாடும் பொம்மை துப்பாக்கி போன்ற, ஏர்கன் போன்ற துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அது பட்டென்ற சட்டத்துடன் செல்போன் மீது பட்டது. அதனால் உடனடியாக நான் அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்.
பின்னர் தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்தி எனது செல்போனை வாங்கிக் கொண்டனர். எனக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை. சிசிடிவி காட்சிகளையும், செல்போனையும் போலீசார் கைப்பற்றிக் கொண்டு, சிம்கார்டை என்னிடம் கொடுத்து விட்டனர். அவற்றை ஆய்வு செய்து விட்டு தருகிறோம் எனக் கூறியதாக தெரிவித்தார்.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.