சிவகாசியில், வீட்டில் இருந்த நபரைக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பழிக்குப் பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த ஆலாவூரணியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுரேஷ் (27). இவர் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமான நிலையில், மனைவியுடன் சிவகாசி – விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் சுரேஷ், வழக்கம் போல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், தகவலறிந்து வந்த மாரனேரி போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட சுரேஷ், கடந்த ஆண்டு திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதையும் படிங்க: நான் முதலமைச்சரானதில் இருந்தே.. செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் திட்டவட்டம்!
எனவே, குணசேகரன் கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது தம்பி மதனகோபால், சுரேஷை வெட்டி கொலைக் செய்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.