கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு ராஜா என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமான நிலையில், மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். ராஜா வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார். எனவே, பெண் குழந்தைகள் 3 பேரும், தன் தாய் மற்றும் தாத்தா பாட்டியுடன் வளர்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தந்தை இல்லாத இடத்தில் தந்தையாக இருந்து குடும்பத்தை காக்க வேண்டிய தாத்தா சரவணன், அந்த பேத்திகளிடமும், தன்னுடைய மருமகளிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யத் தொடங்கியதாகத் தெரிகிறது. இது மருமகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மாமியாருக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, இருவரும் சேர்ந்து சரவணனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன்படி, மாமியாருடன் சேர்ந்து, மாமனார் சரவணனை மருமகளும் தீயிட்டு எரித்து உள்ளனர். இதனையடுத்து, கேட்ட அலறல் சத்ததில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சரவண்அனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜயைச் சுற்றி 11 CRPF படையினர்.. உளவுத்துறை ரிப்போர்ட் என்ன?
இந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சரவணன், உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனிடையே, காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ராஜாவிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.