சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை?: கோவை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை..!!

Author: Aarthi Sivakumar
6 August 2021, 4:19 pm
Quick Share

கோவை: கோவை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களை புழக்கத்தில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மத்திய சிறையில் கஞ்சா, சிகரெட், குட்கா, செல்போன் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக வந்த உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீஸ் சார்பில் 40 பேரும், சிறைத் துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களும் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மத்திய சிறையில் மிகவும் பாதுகாக்கப்பட்ட சிறை பகுதிகள், வால் மேடு, கோபுர மேடு, கிளை சிறை அறைகள் மற்றும் சிறைத்துறை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனைகள் நடைபெற்றது. இச் சோதனையில் பிடிபட்டவைகள் குறித்து போலீஸ் வட்டாரங்கள் வெளியிடவில்லை.

இதேபோல தமிழகத்தில் உள்ள 9 சிறைகளிலும் இச்சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனைக்கு பிறகு இன்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 339

0

0