தி.மு.க., எம்.எல்.ஏ. வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு..! மோசடி வழக்கில் நடவடிக்கை..!

11 September 2020, 8:00 pm
Quick Share

கரூர் : மோசடி வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க., எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தி.மு.க., எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0