‘காவல் நிலைய பெயர் பலகைகளில் தனியார் விளம்பரங்கள் இருக்க கூடாது’: அதிரடி உத்தரவிட்ட டிஜிபி…!!

Author: Aarthi Sivakumar
17 September 2021, 4:08 pm
Quick Share

சென்னை: காவல் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவனங்களின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் விளம்பரப்பலகைகள் இடம் பெற்றிருப்பது பொதுமக்கள் பார்வையில் தவறான புரிதலை ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாக, அனைத்து காவல் நிலைய பெயர் பலகைகளில் காவல்நிலைய பெயரைத் தவிர, விளம்பரதாரரின் பெயர்கள் இடம் பெற்றிருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், அதற்குப் பதிலாக புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்கி சில காவல் நிலையங்களில் பெயர்ப்பலகை வைத்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 209

0

0