பட்டியலின மக்களை இழிவுபடுத்திய சூப்பர் மாடல்… ஆஜராகுமாறு சம்மன் : கைது செய்யப்படுவது உறுதி..?

Author: Babu Lakshmanan
11 August 2021, 12:51 pm
mira mithun - updatenews360
Quick Share

சூப்பர் மாடல் என தனக்கு தானே பட்டத்தை சூட்டிக் கொண்டு, கிடைக்கும் ஒன்றிரண்டு படங்களில் நடத்தும் முகம் வெளியே தெரியாத நிலையில், சமூக வலைதளங்களின் மூலம் வெறும் சர்ச்சையினாலேயே எதிர்மறையான புகழுக்குச் சென்றவர் மீரா மிதுன். அப்படி பட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சர்ச்சை நாயகியாகவே வலம் வந்தார்.

அந்த நிகழ்ச்சியில் கூட இயக்குநர் சேரன் தன்னிடம் அவதூறாக நடந்து கொண்டதாகக் கூறி விட்டு, சமூக வலைதளங்களில் பாய் பெஸ்ட்டியுடன் அடிக்கும் லூட்டி பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தையே கிளப்பி வந்தது.

அதுமட்டுமில்லாமல் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை விமர்சித்து செமத்தயாக ரசிகர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார். இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் மூக்குடைபட்டு வந்த சூப்பர் மாடல் மீரா மிதுன், தற்போது சாதி பற்றி பேசி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

அதாவது, பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும், இத்தகைய சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என ஏகத்துக்கும் இழிவுபடுத்தி பேசினார் மீரா மிதுன். அவரது இந்த பேச்சு திரைத்துறையில் மட்டுமல்ல பொதுவாக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட பலரும் மீரா மீதுன் மீது புகார்களை அளித்தனர். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு- சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்ய தூண்டுதல், ஜாதி மதம் குறித்து பேசி கலகத்தை உருவாக்குதல் என ஜாமீனில் வெளிவர முடியாத 7 பிரிவுகளில் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மீரா மிதுன் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு -சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விசாரணைக்குப் பின்னர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மீரா மிதுன் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Views: - 364

0

0