காவல் நிலையத்தில் விவசாயி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த போலீஸ் : ஷாக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 12:52 pm
Farmer Suicide - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொடைரோடு கன்னிமார் நகரைச் சேர்ந்த பாண்டி என்ற விவசாயி தனக்கு சொந்தமாக இதே பகுதியில் ஒன்றை ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

அதில் நான் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறேன் இதை வைத்து என் வாழ்வாதாரத்தை வளர்த்து வரும் சூழ்நிலையில் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் நாச்சியப்பன் சின்ன கருப்பு உருப்பட மூன்று பேரும் சேர்ந்து எனது நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்கள்.

அடியாட்கள் கொண்டு என்னையும் எனது மகனையும் எனது குடும்பத்தாரையும் தாக்கி வருகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்றும் கூறி மிரட்டி உள்ளனர்.

இதை எடுத்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சண்முக லட்சுமிமியிடம் விவசாயி பாண்டி புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் மூலம் உடனடியாக பாண்டியை மிரட்டும் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

அந்த உத்தரவு நகலையும் பெற்றுக் கொண்டு பாண்டி காவல் நிலையத்தில் சென்ற பொழுது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக கடந்த ஏழாம் தேதி இரவு அம்மைநாயக்கனூர் காவல் நிலையம் சென்று தான் கொடுத்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்
காவல்துறையினர் கண்டுகொள்ளாததால் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை காவல்துறை ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் அங்கு பணிபுரியும் காவல் துறையினர் முன்பு விஷம் அருந்தி உள்ளார்.

இதை பார்த்த காவல்துறை ஆய்வாளர் உட்பட எந்த ஒரு காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் காவல்துறை ஆய்வாளர் சண்முக லட்சுமி விவசாயி பாண்டி யார் மீது புகார் அளித்தாரோ அவர்களுக்கு செல்போனில் பேசும் ஆடியோ மற்றும் விவசாயியை வேடிக்கை பார்க்கும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களை காப்பாற்றவேண்டிய காவல்துறையினர் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் ஒரு நபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று அல்ல அதை வேடிக்கை பார்த்து தொலைபேசியில் பேசி வருகின்றனர்.

ஒருவர் வீடியோ எடுத்து வருகிறார். மேலும் விவசாயி பாண்டி மூன்று நாட்களுக்குப் பிறகு திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி கடந்த பத்தாம் தேதி உயிரிழந்தார்.

சாலையில் ஒரு நாய் அடிபட்டாலே ஓடோடி தூக்கிச் செல்லும் தமிழகத்தில் காவல் நிலையம் முன்பு விவசாயி ஒருவர் விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டதை வேடிக்கை பார்த்த இதுபோன்ற ஈவு இரக்கமில்லாத காவல்துறை ஆய்வாளர் உட்பட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Views: - 449

0

0