சந்தன கடத்தல் வீரப்பனை பிடித்த சிறப்பு படையில் பணியாற்றிய காவலர் தற்கொலை : மனைவியின் சேலையில் தூக்கிட்ட சோகம்!!

9 October 2020, 11:12 am
Police Suicide - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ரமேஸ்குமார் (வயது 45). இவர் கோம்புபள்ளம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் கடந்த ஒன்றரை ஆண்டாக குடியிருந்து வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவியும். இரு மகள்களும் உள்ளனர்.

இவர் பணி ஓய்வில் வீட்டில் இருந்த போது தனது படுக்கும் அறையில் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் உடனடியாக ரமேஸ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தலைமை காவலர் ரமேஷ்குமார் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் சத்தியமங்கலம் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் பல்வேறு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதன்காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு இலக்கு காவல் படையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வந்தவர் என்பதும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகவும் சத்தியமங்கலம் சிறப்பு இலக்கு காவல் படையில் நுண்ணறிவு காவலராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

Views: - 57

0

0