பெரம்பலூரில் நள்ளிரவில் அதிமுகவின் போஸ்டரை போலீஸ்காரர் ஒருவர் கிழித்ததால், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் போதை பொருளின் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில தழுவிய போராட்டமும் நடைபெற்றது.
முன்னதாக, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டம் குறித்து அனைத்து இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை நேற்று நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பெரம்பலூர் நகர பகுதியில் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை காவல்துறையினர் கிழித்த சம்பவம் பெரம்பலூரில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனைக் கண்ட பெரம்பலூர் நகர கழகச் செயலாளர் ராஜபூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் காவல்துறையினரை கண்டித்து திமுகவிற்கு கைக்கூலியாக செயல்படாமல் தங்களது பணியை செய்ய வேண்டும் எனவும், தங்கள் போஸ்டரை கிழித்தால் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.