கோவையில் ரத்த அழுத்தம் காரணமாக காவலர் பலி

3 February 2021, 10:53 am
Quick Share

கோவை:கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 24 இளம் காவலர் ஒருவர் ரத்த அழுத்தம் காரணமாக சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை மாவட்டம், சேடப்பட்டி தாலுகா, பெருங்காமநல்லூர், பகுதியில் வசித்து வந்தவர் தங்கராஜ் (வயது 24) இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி பி.ஆர்.எஸ் 23 -ஆவது ஸ்குவாட் பயிற்சி முடித்தார்.

தங்கதுரை கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட செல்வபுரம் காவல் நிலையத்தில் க பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 6ம் தேதி காலை வழக்கம் போல பணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம் அருகே வரும் போது மயங்கி திடீரென கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது டாக்டர்கள் இவருக்கு அளவுக்கு அதிகமான இரத்த கொதிப்பின் காரணமாக, மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் ரத்தம் உறைந்து உள்ளதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து இவர் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இடதுபுறம் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இருந்ததாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை கேட்ட செல்வபுரம் போலீசார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Views: - 0

0

0