தொண்டையில் உணவு சிக்கி உயிருக்கு போராடிய காவலர் : சற்றும் யோசிக்காமல் சக காவலர் செய்த காரியம்… குவியும் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2022, 7:06 pm
Police Safe - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்தில் காவலர் ஒருவருக்கு உணவு உண்ணும் போது தொண்டையில் உணவு குழாய் அடைத்து உயிருக்கு போராடிய நிலையில் துரிதமாக செயல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அவரை காப்பாற்றினார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 21ஆம் தேதி கவுன்சிலர்கள் மன்ற கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். அதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்

மதிய நேரம் என்பதால் காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை காவலர் அபுதாகிர் சாப்பிடும் போது அவர் உணவு குழாய் பகுதியான தொண்டையில் திடீரென உணவு சிக்கிக்கொண்டது.

இதனால் என்ன செய்வதென தெரியாமல் உயிருக்கு போராடிய நிலையில் அங்கு இருந்த மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் தாமோதரன் அவர்களிடம் ஓடி சென்று காப்பாற்று மாறு செய்வதை காட்டியுள்ளார்.

உடனடியாக சுதாரித்த உதவி ஆய்வாளர் தாமோதரன் அவரை தூக்கி குளுக்கி முதலுதவி செய்து அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது

தற்போது அந்த காட்சியை வெளியிட்ட நகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் தாமோதரன் அவர்களை பாராட்டியுள்ளனர். அது குறித்து வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி நிலையில் காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Views: - 392

0

1