கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம் : அமைச்சர் எஸ்பி வேலுமணி துவக்கி வைத்தார்!!

31 January 2021, 9:43 am
SP VElumani- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமை உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.

நாடு முழுவதும் 5 வயது குழந்தைக்குட்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0