பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜரான குற்றவாளிகள்…விசாரணை ஒத்திவைப்பு..!!

Author: Aarthi Sivakumar
7 October 2021, 10:31 am
Pollachi Case - Updatenews360
Quick Share

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கை பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், உட்பட 5 பேரை பொள்ளாச்சி போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து தற்போது சிபிஐ சார்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹாரன் பால், பாபு, அருண் குமார், மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி நகர மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடந்தது குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Views: - 279

0

0