கூரைல ஏறி கோழி புடிக்க முடியல.. வானத்துல ஏறி வைகுண்டமா? பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து..!

Author: Vignesh
27 August 2024, 2:52 pm

கூரையேறி கோழி பிடிக்க முடியாமல் வானம் ஏறி வைகுந்தம் செல்கிறாரா?முதல்வர் அமெரிக்க பயணம் குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்

பொள்ளாச்சி அருகே உள்ள முள்ளுப்பாடி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் செலவில் புதிய பேருந்து பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் துணை சபாநாயகரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பேருந்து நிழற்குடையை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளிதத பேட்டியின் போது, தமிழகத்தில் கோவை, சென்னை விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சார கட்டணம், சொத்து வரி, தொழில் வரி உயர்வு காரணமாக சிறு குறு தொழில்கள் முடங்கி ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை முதல்வர் தெரிந்துள்ளாரா? என்ற சந்தேகம் உள்ளது.

முதலில் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள சிறு குறு தொழிலதிபர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லைதென்னை நார் தொழிலுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்குவதாகவும் நெசவாளர்களுக்கு சலுகைகள் செய்வதாக உறுதியளித்தார்.

ஆனால், தற்போது இத்தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் சரி செய்துவிட்டு முதல்வர் வெளிநாடு செல்ல வேண்டும். கூரையேறி கோழி பிடிக்க முடியாமல் வானம் ஏறி வைகுந்தம் செல்வதைப் போல விமானம் ஏறி அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் அமெரிக்கா சென்று விட்டு வந்தாவது தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்கள் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!