பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணை தீவிரம் : முதன்முறையாக குற்றவாளிகள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 6:09 pm
Pollachi Case - Updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 பேரையும் போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன்பால், பாபு, அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதை விசாரித்த நீதிபதி, தினமும் விசாரணை நடத்தி 6 மாதத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று 9 பேரும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் கூடுதல் குற்றப்பத்திரிகையை நகல் வழங்கப்பட்ட நிலையில் வழக்கை இந்த மாதம் 29ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.

Views: - 215

0

0