மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்…!!

8 November 2020, 1:33 pm
Crackers - Updatenews360
Quick Share

சென்னை: நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

தீபாவளி நாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் மாசுபடுகின்றன. அத்துடன் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளால் சிறுகுழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், குறிப்பிட்ட பகுதியில் பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அதே நேரத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும், அனைத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடும், அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Views: - 22

0

0