மயக்க மருந்து கொடுத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல்!
20 September 2020, 10:45 amவேலூர் : பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 16 வயது மாணவியை கல்லூரியில் பணிபுரிந்த நிர்வாக அலுவலர் மயக்க மருந்து தெளித்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதாப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி செல்வகுமார். இவருக்கு ஒரு கால் முறிவு ஏற்பட்டதால், இவரது மனைவி சயிதா பீடி சுற்றும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார்.
இவரது இரண்டு மகள்களும் இறையன் காடு அருகேயுள்ள அன்னை பாலிடெக்னிக் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டு படித்து வரும் 16 வயதுடைய அவரின் இரண்டாவது மகளை கடந்த பிப்ரவரி மாதம் ரெக்கார்ட் நோட் எடுத்து செல்ல வேண்டும் வா என அங்கு பணிபுரியும் நிர்வாக அலுவலர் பிரதாப் என்பவர் அழைத்துள்ளார்.
அந்த மாணவி நோட்டை எடுக்க அறையுள் சென்றவுடன் முகத்தில் மயக்க ஸ்பிரே மருந்து தெளித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த மாணவியை பிரதாப் கல்லூரியின் உள்ளே அவரின் அறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் மயக்கம் தெளிந்து மாணவி எழுந்தவுடன் பாலியல் விவகாரம் யாருக்கும் தெரிய கூடாது எனவும் அவ்வாறு தெரிந்தால் நீயும் உனது அக்காவும் இந்த கல்லூரியில் படிக்க முடியாது அத்துடன் என் செல்வாக்கால் உங்களை அழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி வீட்டிலும் சொல்லவில்லை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை .
கர்பமான மானவியை பெற்றோர் இதற்கு யார் காரணம் என்று கேட்டபோதும் இந்த மாணவி பயத்தினால் பதில் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் மாணவியை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை செய்த போது மாணவி 7 மாதங்கள் கர்ப்பமாக உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்து பெற்றோர்களிடம் கூறினார்கள் .
அப்போதும் மாணவி இதற்கு யார் காரணம் என பெற்றோர்களிடம் கூறவில்லை இதனால் மருத்துவர்கள் 16 வயது நிரம்பிய சிறுமி கர்ப்பமாக உள்ள விவகாரம் குறித்து சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சமூக நலத்துறையினர் மாணவியை தனியாக அழைத்து சென்று தைரியப்படுத்தி விசாரணை செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
படிக்கும் பாலிடெக்னிக் கல்லூரியிலேயே நிர்வாக அலுவலராக உள்ள பிரதாப் தான் தன்மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததை எடுத்து கூறினார் . மாணவியின் குடும்பமோ மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. இதனை பயன்படுத்தி குற்றவாளி பிரதாப் தப்பிவிடலாம் என முயன்ற போதும் அதிகாரிகள் கிடுக்கு பிடியுடன் விசாரித்து பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் சமூக நலத்துறையினர் புகார் அளித்தனர் . இதன் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி வளாகத்திலேயே அதுவும் நிர்வாக அலுவலக அறையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலை வேறு எந்த மாணவிக்கும் வரகூடாது என பெற்றோர்கள் கதறுகின்றனர்
0
0