சென்னை-புதுச்சேரி இடையேயான நீர்வழிப் போக்குவரத்து திட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு…!!!

Author: Aarthi
10 October 2020, 4:20 pm
pon rahda - updatenews360
Quick Share

சென்னை-புதுச்சேரி இடையே தொடங்கவுள்ள நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தினை வரவேற்பதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை-புதுச்சேரி இடையே நீர்வழிப் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை – குமரி இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான திட்டம் தயாராக இருப்பதாகவும் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, சென்னை-புதுச்சேரி இடையே நீர்வழிப் போக்குவரத்து தொடங்கவுள்ளதை வரவேற்பதாகவும், மேலும் சென்னை-கன்னியாகுமரிக்கு இடையேயும் நீர்வழிப் போக்குவரத்து திட்டம் தயாராக உள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை விரைவில் முடிக்கவுள்ளதாகவும், சென்னை-கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில்வே பாதை அமைக்க வேண்டும் எனவும் பொன்.ராதா கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 49

0

0