விவசாயிகளின் பேரணியை சீர்குலைக்கவே கண்ணீர் புகை குண்டுவீச்சு : புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு

26 January 2021, 5:43 pm
narayanasamy - updatenews360
Quick Share

புதுச்சேரி : டெல்லியில் விவசாயிகளின் பேரணியை குளைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு திட்டமிட்டு கண்ணீர் புகை குண்டை வீசி உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

துணைநிலை ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற கோரி ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைக்க கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

பின்னர், தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது :- டெல்லி போராட்ட களத்தில் விவசாயிகளின் உயிரிழப்பிற்கும் மத்திய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். டெல்லியில் விவசாயிகளின் பேரணியை குலைக்க வேண்டும் என்பதற்காக, மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டை வீசி உள்ளது. விவசாயிகளின் ஒற்றுமையை குலைத்து தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்கு இந்த வேலையை செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

நாடு முழுவதிலும் விவசாயிகளின் போராட்டம் கொழுந்துவிட்டு எரியும் நிலையில், பிரதமர் மோடி விழித்துக்கொண்டு 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும், என வலியுறுத்தினார்.

Views: - 0

0

0