புதுச்சேரியில் நள்ளிரவில் நடைபாதை வியாபாரிகள் காவல் நிலைய வாசலில் கற்கலை வீசி மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா (31). இவர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் வாசலில் பூ விற்று வருகிறார். இதே போல் உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வள்ளி (46). இவர், சோளம் விற்பனை செய்கிறார், இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்ததாக
கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு கவுசல்யா, வள்ளி இருவரும் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதை அறிந்த வள்ளிக்கு ஆதரவாக அவரது மகன் துளசி (25) மற்றும் சில வாலிபர்களும், கவுசல்யாவுக்கு ஆதரவாக அவரது சகோதரர் நாராயணன் (34) மற்றும் சில வாலிபர்கள் வந்தனர். இரு தரப்பும் மணக்குள விநாயகர் கோவில் அருகே மோதி கொண்டனர். அப்போது விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சாலையில் கொட்டி வீசினர்.
இரு தரப்பில் காயமடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட பெரியக்கடை போலீஸ் நிலையம் சென்றனர். காவல் நிலையத்தில் 2 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததால், இரு தரப்பும் போலீஸ் நிலையம் எதிரே கற்கலை வீசி தாக்கி கொண்டனர். இதில், துளசியின் மண்டை உடைந்தது. போலீஸ் நிலையத்திற்கு உள்ளே அழைத்து செல்லப்பட்ட இரு தரப்பும் மீண்டும் மோதி கொண்டது.
போலீஸ் நிலைய பூ ஜாடிகளை துாக்கி வீசியது. சாலையோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களை தள்ளி விட்டனர். இதனால் பெரியக்கடை காவல் நிலையம் கலவர பகுதியாக மாறியது. பணியில் இருந்த 2 போலீசாரால் தடுக்க முடியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியஞ்சாலை காவல் நிலையை ஆய்வாளர் மனோஜ் மற்றும் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை துரத்தினர். காயமடைந்த துளசி, வள்ளி, அபி, நாராயணன், கவுசல்யா உட்பட 6 பேர் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் நிலைய வாசலில் இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் இரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.