மத்திய அரசின் செயலால் புதுச்சேரியில் 11 பெண் எம்எல்ஏக்கள் தேர்வாவார்கள் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கோரிமேடு அருகே உள்ள ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். அப்போது, மாணவர்களோடு கலந்துரையாடி பாடம் நடத்தினார். மேலும், மாணவர்களுக்கு மதிய உணவினையும் பரிமாறினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். இது பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும். இந்த இடஒதுக்கீட்டின் மூலம் புதுச்சேரியில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தில் 77 பெண் எம்.எல்.ஏ.க்களும், 13 பெண் எம்.பி.க்களும் இருப்பார்கள்.
ஆளுநர் உண்மையாக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அடிப்படையில் என்னிடம் வரும் கோப்புகள், அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் சிலவற்றை தெரிவிக்கிறேன். அதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிகவும் கடுமையாக முயற்சித்து மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுள்ளோம். அதற்காக நன்றி தெரிவித்து பிரதமருக்கு மாணவிகள் கடிதமும் எழுதியுள்ளனர், எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.