இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு… மற்றவர்களுக்கு No Exam : புதுச்சேரி பல்கலை., அறிவிப்பு

Author: Babu
23 July 2021, 7:19 pm
pondicherry university - updatenews360
Quick Share

புதுச்சேரி : கலை, அறிவியல் கல்லூரிகளில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் சமயத்தில் புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் தொடர்பாக தெளிவான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே, ஆன்லைனில் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழகத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் கடிதம் எழுதினார். அதன்படி, ஆன்லைன் தேர்வு முறையை பல்கலைக்கழகம் முன்னெடுத்து நடத்தியது.

இந்நிலையில், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர், அனைத்துக்கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். பட்டப்படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பட்டமேற்படிப்பில் முதலாண்டு செமஸ்டர் வரும் ஜூலை 27 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. அவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அவை அகமதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படும். அதேநேரத்தில் இம்மாணவர்கள் தேர்வுகளுக்கு பதிவு செய்யவேண்டும். அதேபோல் தேர்வுக்கட்டணம் உட்பட அனைத்து விஷயங்களையும் ஏற்கெனவே தரப்பட்டுள்ள அட்டவணைப்படி பின்பற்ற வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அறிவிப்பானது முழுக்க கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும், பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

Views: - 450

0

0