பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பு : பிரபல வழிப்பறி கொள்ளையர்கள் கைது…!!
Author: kavin kumar31 ஜனவரி 2022, 2:20 மணி
புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பிரபல வழிபறி கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி திருபுவனை புத்து கோயில் விதியை சேர்ந்தவர் அமுதா (50). இவர் திருவாண்டார்கோயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் அமுதாவின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை அறுத்து சென்றனர். இது குறித்து அவர் திருபுவனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.
அதில் ஹெல்மட் மற்றும் மாஸ்க் அனிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் அமுதா நடந்து செல்லும் தெருவிர்குள் வந்து செல்வது பதிவாகி இருந்தது கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுப்பட்டிருந்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். செல்போன் சிக்னல் மூலமாக அவர்கள் குறித்து விசாரணை செய்ததில், அவர்கள் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (22), மற்றும் சென்னையை சேர்ந்த சசிகுமார் (21) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் பிடிக்க செல்லும் போதெல்லாம் அவர்கள் தப்பி சென்று விடுவதாக இருந்த நிலையில், நேற்று அவர்கள் நாமக்கல்லில் தங்கி இருப்பதாக திருபுவனை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இரண்டு வாலிபர்களையும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் மீது தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சில வழக்குகளில் தமிழக போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருவதும் தெரியவந்துள்ளது, தொடர்ந்து அவர்களிடம் இருந்த 3 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களை சேலம் போலீசார் ஒரு வழிபறி வழக்கில் தேடி வந்த நிலையில், இருவரும் புதுச்சேரியில் கைதாகி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சேலம் போலீசார் புதுச்சேரி விரைந்து வந்து இருவரையும் சேலம் அழைத்து சென்று அங்கு சிறையில் அடைக்க உள்ளனர்.
0
0